/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களிடம் எஸ்.பி., குறை கேட்பு
/
பொதுமக்களிடம் எஸ்.பி., குறை கேட்பு
ADDED : ஆக 16, 2025 11:35 PM

திருக்கனுார்:காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் நடத்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், எஸ்.பி., வம்சித ரெட்டி பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 11:00 முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடத்த மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமை தாங்கி, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காண போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதில், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், கீர்த்திவர்மன், கலைசெல்வன், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், பிரியா, திருமுருகன், கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சுதந்திர தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான ராஜிவ் காந்தி காவல் பதக்கம் பெற்ற காட்டேரிக்குப்பம், சிறப்பு நிலை ஏட்டு ஜெகதீசனுக்கு, எஸ்.பி., வம்சித ரெட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

