
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறை யில் வடக்கு பிரிவு எஸ்.பி., யாக பணியாற்றியவர் வீரவல்லபன். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.
இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா காவல்துறை தலைமையகத்தில் நடந்தது. விழாவில் போலீஸ் டி.ஜி.பி., ஷாலினிசிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பணி ஓய்வு பெற்ற வீரவல்லபனை கவுரவித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், முத்துக்குமார், இனியன் ஆகியோர் தோளில் சுமந்தபடி துாக்கி சென்று வழியனுப்பி வைத்தனர்.