/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ டிரைவர்களுக்கு எஸ்.பி., எச்சரிக்கை
/
ஆட்டோ டிரைவர்களுக்கு எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : செப் 07, 2025 11:10 PM
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார் - ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, எஸ்.பி., ரச்சனா சிங் தலைமை தாங்கினார். கிழக்கு - வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.பி., ரச்சனா சிங் பேசுகையில், 'டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களை சாலைகளில் நிறுத்தி வைக்காமல், அதற்காக ஒதுக்கப்பட்ட ஸ்டாண்டுகளில் மட்டுமே நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.