தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை; 12 பேர் கைது

இடத்தில் ரகளை; 12 பேர் கைது

இடத்தில் ரகளை; 12 பேர் கைது


ADDED : நவ 10, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று (நவ.,9) பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். மூலகுளம் தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூலகுளம் ஒபாத்தீன்,23; கண்டமங்கலம் விஜயகுமார்,36; ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், மூலகுளம் தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நெல்லித்தோப்பு கதிர்வேல்,59; மூலகுளம் மகேந்திரன்,38; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகடை போலீசார் நேற்று காந்தி வீதியில் ரோந்து சென்றபோது, பெரிய மார்க்கெட் பகுதியில் இளம்பெண்களை ஈவ் டீசிங் செய்த முத்தியால்பேட்டை சுரேஷ்குமார்,37; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீசார் நேற்று சோலை நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, பாப்பாம்மாள் கோவில் தெருவில், குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை வேலுவை கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பாரதியார் நகர் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திண்டிவனம் விஜயன், 42, என்பவரை கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று பாண்டி மெரினா பீச்சில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஐயங்குட்டிப்பாளையம் 24, என்பவரை கைது செய்தனர்.

திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, திருபுவனை ஜங்ஷனில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம், சிவா,35; என்பவரை கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று நுாறடி சாலை சந்திப்பில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி விக்னேஷ்,23, என்பவரை கைது செய்தனர். அதேபோல், கொம்பாக்கம் பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நைனார்மண்டபம் கார்த்திகேயன்,31; என்பவரை கைது செய்தனர்.

மாகே போலீசார் நேற்று படகு குழாம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோழிக்கோடு ஷீஜூ,45; என்பவரை கைது செய்தனர். அதேபோல், பள்ளூர் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோழிக்கோடு அபிஜித்,24, என்பவரை பள்ளூர் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us