தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தலைமை செயலரை விட எம்.எல்.ஏ.,க்களுக்கே அதிகாரம்: சட்டசபை விவாதத்தில் சபாநாயகர் அன்பழகன் அதிரடி  

தலைமை செயலரை விட எம்.எல்.ஏ.,க்களுக்கே அதிகாரம்: சட்டசபை விவாதத்தில் சபாநாயகர் அன்பழகன் அதிரடி  

தலைமை செயலரை விட எம்.எல்.ஏ.,க்களுக்கே அதிகாரம்: சட்டசபை விவாதத்தில் சபாநாயகர் அன்பழகன் அதிரடி  


UPDATED : ஆக 31, 2026 11:26 PM

ADDED : ஆக 31, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 11:26 PM ADDED : ஆக 31, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மக்கள் பிரதிநிதிகளை அரசு செயலர்கள் மதிப்பதில்லை; அரசு நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என சராமரியாக எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டினர்.

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம்

எதிர்கட்சித்தலைவர் நாஜிம்:

அதிகாரிகள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்ஏக்களை மதிப்பதில்லை. அமைச்சர்கள் முக்கியமான கூட்டத்திற்கு அழைத்தால் அரசு செயலர் வருவதில்லை. தலைமை செயலர் மீட்டிங் உள்ளது என சென்றுவிடுகின்றனர்.

நேரு எம்.எல்.ஏ.,: அமைச்சர்கள் கூப்பிட்டால் அரசு செயலர்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உத்தரவினை போடுங்கள். காலையில் இருந்து மதியம் வரை துறை தலைவர்கள் கூட அரசு செயலர்கள் மீட்டிங் என்று சென்றுவிடுகின்றனர்.

கார்த்திகேயன்(காங்.,): அரசு செயலர்கள் தங்களுடைய மீட்டிங்கினை மாலை 5 மணிக்கு மேல் போடலாம்.

சபாநாயகர் அன்பழகன்:

புதுச்சேரியில் நீண்டநாட்களாக இரட்டை நிர்வாகம் நடந்து வருகிறது. முதல்வர் அழைத்து ஒரு பிரச்னையை பேசும்போது, அதே பிரச்னையை கவர்னர் மாளிகை, தலைமை செயலரும் அழைத்து பேசுகின்றனர். இப்படி செய்வது ஏன். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தான் ஆக வேண்டும். மரபுபடி புதுச்சேரியில் தலைமை செயலரை விட எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது.

இந்த 16 வது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிய அதிகாரம், மதிப்பும் மரியாதை பெற்றுத்தரப்படும். அரசு விழாக்களை அதிகாரிகள் புறக்கணிக்கிறார்களா. இது தவறான ஒன்று. இதை எந்த அதிகாரியாக இருந்தாலும் திருத்திக்கொள்ள வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் நாஜிம்: முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் தலைமை செயலர் தான் முதலிப் வரவேற்க வேண்டும்.

சபாநாயகர் அன்பழகன்:

தலைமை செயலர், செயலரை எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க வந்தால் அவரை எழுந்து நின்று வரவேற்று அமரவைத்து பின்னர்தான் அதிகாரி அமர வேண்டும். இவ்வாறு விவாதம் அனல் பறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us