தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபையில் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை சபாநாயகர் அன்பழகன் தகவல்

சட்டசபையில் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை சபாநாயகர் அன்பழகன் தகவல்

சட்டசபையில் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை சபாநாயகர் அன்பழகன் தகவல்


ADDED : ஆக 31, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் யாரும் வெளிநடப்புசெய்யவில்லை என சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று சபாநாயகர் அன்பழகன் பேசியதாவது:

கடந்த 24ம் தேதி கவர்னர் உரையோடு துவங்கிய கூட்டத் தொடர் ஆறு நாட்கள் நடந்தது. முதல்வர் ரங்கசாமி 19வது முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

ஒரு நிதி மசோதா அறிமுகப்படுபட்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 3 அறிக்கைகள் மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை, தணிக்கை துறை அறிக்கை, 2024–25 ஆண்டு அரசின் நிதிநிலை தணிக்கை அறிக்கை, 2024 உடன் முடிந்த இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கை மற்றும் புதுச்சேரி பொருளாதார ஆய்வறிக்கை சம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 சட்ட முன்வரைவுகள் அறிமுகப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு நிறைவேற்றப்பட்டது. ஒன்று பரிசீலணையில் உள்ளது. 

 அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளும் பாராட்டுகுரியது. தற்காலிக சபாநாயகரான என்னை நிரந்தர சபாநாயகராக செயல்பட வைத்ததற்கு நன்றி. மேலும், என்.ஆர்.காங்., தி.மு.க., காங்., த.வெ.க., ஜான்குமார், நேரு உள்ளிட்டோர் என்னை நிரந்தர சபாநாயகராக தொடர கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த சட்டசபை பல தலைவர்களை உருவாக்கியுள்ளது.  குறிப்பாக மறைந்த உத்தரவேலு பேச்சை நுாலகத்தில் தேடி படிப்பேன். அவரது சகோதரர் ராஜவேலு இப்போது அமைச்சராக உள்ளார். கண்ணன் மகன் விக்னேஷ்,அவரது தந்தையைபோலவே செயல்படுகிறார். ராதாகிருஷ்ணன் சகோதரர் செந்தில்குமார், அவரது பிரதிபலிப்பாக உள்ளார். 

இந்த கூட்டத் தொடரியில் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. 13 எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகளும் பாராட்டுதலுக்குட்பட்டது.  சட்டசபை அமர்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. சட்டசபையை காலவரையின்றி ஒத்தி வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us