உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு பாராட்டு
உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு பாராட்டு
UPDATED : ஆக 31, 2026 09:44 PM
ADDED : ஆக 31, 2026 09:32 PM
புதுச்சேரி: உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதினை பெற்ற பிரதமர் மோடிக்கு புதுச்சேரி சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை நேற்று திருக்குறள் உரையுடன் தொடங்கியவுடன், சபாநாயகர் அன்பழகன் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோஸ்த்லிக் விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு மக்களிடையேயான உறவை மேம்படுத்துவதிலும் பிரதமர் மோடியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதினை பெற்ற பிரதமர் மோடிக்கு இந்த சட்டசபை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது என தெரிவித்தார். இதை அனைத்து எம்.எல்.ஏக்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
