/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
/
மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
ADDED : ஜன 08, 2026 05:14 AM

புதுச்சேரி: மணவெளி சட்டசபை தொகுதியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம், சபாநாயகர் செல்வம் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துறை மற்றும் மேம்பாட்டு வரை நிலை கழகம், மின்துறை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள், செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மணவெளி சட்டசபை தொகுதியில் நடந்து வரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகள் குறித்தும் சபாநாயகர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.