/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஏப் 07, 2025 06:13 AM

அரியாங்குப்பம்; மணவெளி தொகுதியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் குழாய் அமைக்க, 31.50 லட்சம் ரூபாயில், திட்டப் பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
பூரணாங்குப்பம் நல்ல வாடு தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். தொடர்ந்து, நோணாங்குப்பம் ஆற்றங்கரை வீதியில் ராமலிங்கம் எம்.ஏல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ஓடைவெளி கிராமத்தில் ராமதேவ் நகரில் 7.50 லட்சத்தில், சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலை பொறியாளர் அகிலன், மணவெளி பா.ஜ., தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

