/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வகுப்பறைகள் கட்டும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
வகுப்பறைகள் கட்டும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : நவ 05, 2025 11:53 PM

அரியாங்குப்பம்: அரசு துவக்கப் பள்ளியில், இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார் .
மணவெளி தொகுதி சின்னவீராம்பட்டினம் அரசு துவக்கப் பள்ளியில், 58.45 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, நேற்று சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் பக்தவச்சலம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் வாஞ்சிநாதன், இளநிலைப்பொறியாளர் சுசித்ரா, ஆசிரியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

