/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.51.50 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
ரூ.51.50 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.51.50 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.51.50 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 14, 2025 11:53 PM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ரூ.51.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம், இடையார்பாளையம் அடுத்த திருமுறை கலாநிதி கிருஷ்ண சாமி நகருக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தொகுதி எம்.எல்.ஏ., விடம் மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், தொகுதி எம்.எல்.ஏ., நிதியின் மூலம் ரூ.51.50 லட்சம் மதிப்பில், வடிகால் வசதியுடன் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
உதவிப் பொறியாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.