/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதியுடன் சபாநாயகர் சந்திப்பு
/
துணை ஜனாதிபதியுடன் சபாநாயகர் சந்திப்பு
ADDED : ஏப் 23, 2025 04:24 AM

புதுச்சேரி : டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சந்திப்பின் போது புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை நடத்த அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட துணை ஜனாதிபதி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சரும், புதுச்சேரி மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான மான் சுக் மண்டாவியா, மத்திய அமைச்சரும், இணை பொறுப்பாளருமான அர்ஜூன்ராம் மேக்வால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

