/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பெருமாள் கோவில் தேர் திருவிழா சபாநாயகர், அமைச்சர் வடம்பிடித்து துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 11, 2025 04:14 AM

வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா சபாநாயகர் மற்றும் அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 21ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழாவில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
பிரமோற்சவத்தில் முக்கிய விழாவாக கடந்த 6ம் தேதி பல்லக்கு மோஹநாவதாரம், அன்று மாலை கருடசேவை நிகழ்ச்சியும், 7ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று (10ம் தேதி) தேர் திருவிழா நடந்தது. காலை 8:40 மணியளவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்று தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்தனர். தேர் வில்லியனுார் மாட வீதிகள் வழியாக காலை 11 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
இன்று(11ம் தேதி) மட்டையடி உற்சவமும், நாளை 12ம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 13ம்தேதி ஊஞ்சல் உற்சவமும், 14ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்கின்றனர்.