/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களுக்கு ஐஸ் பெட்டி சபாநாயகர் வழங்கல்
/
மீனவர்களுக்கு ஐஸ் பெட்டி சபாநாயகர் வழங்கல்
ADDED : ஜூலை 18, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மீன் விற்பனையாளர்களுக்கு இலவச ஐஸ் பெட்டிகளை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் விற்பனையாளர்களுக்கு, மீன்களை பதப்படுத்தி சுகாதார முறையில் விற்பனை செய்வதற்கு இலவசமாக ஐஸ் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நல்லவாடு கிராமம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. தொகுதியை சேர்ந்த 244 பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகளை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். திட்ட அதிகாரி மீரா சாஹிப், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், மீனவ பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.