தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 31 பேர் உடல்சிதறி பலி

இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 31 பேர் உடல்சிதறி பலி

இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 31 பேர் உடல்சிதறி பலி


UPDATED : பிப் 06, 2026 11:19 PM

ADDED : பிப் 06, 2026 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 11:19 PM ADDED : பிப் 06, 2026 04:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். 169 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

இஸ்லாமாபாதில் ஷெஹ்சாத் நகர் பகுதியில் உள்ள மத வழிபாட்டுத்தலத்தில் ஏராளமானோர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்தது.

பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் அங்கே ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. என்ன நிகழ்ந்தது என்பதை உணர முடியாமல் வழிபாடு நடத்தியவர்கள் பதற்றம் அடைந்தனர். சில வினாடிகள் கழித்தே அங்கு வெடித்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

குண்டுவெடிப்பில் பலரும் சிக்கி ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். அவர்களில் பலர் படுகாயங்களுடன் அலறியபடி துடித்தனர். தகவலறிந்த போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 31 பேர் பலியாகி உள்ளனர். 169க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து இஸ்லாமாபாத் நகர காவல்துறை செய்தி தொடர்பாளர் தாகி ஜாவத் கூறுகையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து கையாண்டு வருகிறோம். சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய தடயவியல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தெஹ்ரிக் இ தாலிபன் இயக்கமே இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us