/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நோயாளிகள் பதிவு செய்ய ஜிப்மரில் தனி பிரிவு துவக்கம் சபாநாயகர் செல்வம் தகவல்

ADDED : ஜன 11, 2025 06:40 AM
புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி நோயாளிகள் பதிவு செய்ய தனி பிரிவு துவங்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை, கடந்த அக்டோபர் 15ம் தேதி டெல்லியில் சந்தித்து, ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
இதனால், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெருவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் ஜிப்மரில் எளிதாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தனியாக பதிவுப்பிரிவு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
இந்த கோரிக்கை மீது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உரிய நடவடிக்கை எடுத்து, தற்போது ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தனி பதிவுப்பிரிவு ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் தனி கவுன்டரில் பதிவு செய்ய ஜிப்மர் நிர்வாகம் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.