/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு அரங்கப் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
விளையாட்டு அரங்கப் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 20, 2024 04:10 AM

அரியாங்குப்பம் : ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கத்தில் ரூ. 40.72 லட்சம் மதிப்பில் தரை தளம் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரியில் உள்விளையாட்டு அரங்கத்தில் ரூ. 40.72 லட்சம் மதிப்பில் மரத்தினால் ஆன தரை தளம் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கல்வித்துறையின் விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குநர் செந்தில்குமார், துணை இயக்குநர் வைத்தியநாதன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற் பொறியாளர் சுப்புராயன், உதவிப் பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

