/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
சபாநாயகர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : நவ 18, 2025 06:00 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பிரமுகரும், மோடி மக்கள் சேவை இயக்க நிறுவனருமான பிரபுதாஸ் ஏற்பாட்டில் சபாநாயகர் செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் எதிரே நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில மகளிரணி தலைவி தாமரைச் செல்வி, தொகுதி தலைவர் சக்திவேல், பொதுச்செயலாளர் ராபர்ட் கிளைவ், மாநில மகளிர் அணி செயலாளர் கீதா, பிரமுகர்கள் இளங்கோ, பிரியா, ராஜேஸ்வரி, இலக்கியா, அகிலா, அசோக், லாரன்ஸ், சதீஷ், விக்கி உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

