/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய நிதியமைச்சரிடம் சபாநாயகர் மனு
/
மத்திய நிதியமைச்சரிடம் சபாநாயகர் மனு
ADDED : நவ 28, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டில்லியில் மத்திய நிதியமைச்சரை சபாநாயகர் செல்வம் சந்தித்து பேசினார்.
டில்லி சென்றுள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வம்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து,புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள தலைமை செயலகத்துடன், ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் கட்டுவதற்கு விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு, இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் வழங்கினார்.
மனுவினை பெற்றுக் கொண்ட நிதியமமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

