/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லவாடு பகுதியில் சபாநாயகர் பார்வை
/
நல்லவாடு பகுதியில் சபாநாயகர் பார்வை
ADDED : நவ 27, 2024 11:18 PM

அரியாங்குப்பம் : நல்லவாடு மீனவர்கள் குடியிருப்பு பகுதியை சபாநாயகர் மற்றும் கலெக்டர்பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று, புயல் எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. துறைமுகத்தில், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு, புதுக்குப்பம் ஆகிய மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளை, சபாநாயகர் செல்வம், கலெக்டர் குலோத்துங்கள் பார்வையிட்டனர். பின்னர், புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரை பகுதியில் உள்ள படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளை வழங்குவது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், மீன்வளத்துறை அதிகாரிகள், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உடனிருந்தனர்.