தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எம்., கிசான் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

பி.எம்., கிசான் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

பி.எம்., கிசான் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்


UPDATED : அக் 29, 2026 11:05 PM

ADDED : அக் 29, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:05 PM ADDED : அக் 29, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய அரசின் பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், மத்திய அரசின் பதிவேட்டில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி உழவர் உதவியகத்தில் நடந்தது.

முகாமில், பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் கார்டு நகல் மற்றும் நிலத்தின் பட்டா நகல்களுடன் பங்கேற்று, உழவர் அடையாள அட்டையைக் காண்பித்து மத்திய அரசின் விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் வெங்கடாசலம், உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் மற்றும் கிராம விரிவாக்கப் பணியாளர்கள் ஏழுமலை, சிவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பயன்பெற்றனர்.

இத்திட்டத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை சாகுபடி செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us