/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை ரூ.6.5 கோடியை வசூலிக்க சிறப்பு முகாம்
/
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை ரூ.6.5 கோடியை வசூலிக்க சிறப்பு முகாம்
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை ரூ.6.5 கோடியை வசூலிக்க சிறப்பு முகாம்
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை ரூ.6.5 கோடியை வசூலிக்க சிறப்பு முகாம்
ADDED : அக் 01, 2024 06:15 AM
புதுச்சேரி: போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, கடந்த இரண்டரை ஆண்டில் விதிக்கப்பட்ட அபராத தொகையில், ரூ. 6.5 கோடி நிலுவை வசூலிக்க 7 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் ஸ்பாட் பைன் மெஷின் மூலம் இ-சலான் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட தகவல் வாகன ஓட்டியின் மொபைல்போனுக்கு தகவல் அனுப்படுகிறது. இ-சலான் மூலம் அபராதம் அனுப்பினாலும், பலர் அந்த அபராத தொகையை ஆன்லைன் அல்லது நேரடியாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி செலுத்த வேண்டும்.
கடந்த 2022 முதல் இரண்டரை ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இ-சலான் பெற்றும் அபராத தொகையை செலுத்தவில்லை என தெரியவந்தது. இதன் மூலம் ரூ. 6.5 கோடி அபராத தொகை நிலுவையில் உள்ளது.
நிலுவை அபராத தொகையை வசூலிக்க போலீஸ் டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் இன்று 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையங்களில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த அறிவுறுத்தி உள்ளது. செலுத்த தவறும் வாகன ஓட்டிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் லைசன் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.