/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோலார் பேனல் அமைக்க நாளை சிறப்பு முகாம்
/
சோலார் பேனல் அமைக்க நாளை சிறப்பு முகாம்
ADDED : அக் 12, 2024 05:21 AM
புதுச்சேரி: வீட்டு மேற்கூரையில், சோலார் பேனல் அமைப்பது குறித்து, நாளை கவுண்டபாளைத்தில் முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, மின்துறை, கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி மின்துறை, புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை மற்றும் புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டப்பிரிவு இணைந்து, கவுண்டபாளையம், முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பது குறித்து முகாம் நாளை 13ம் தேதி நடக்கிறது.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம், வீட்டு மேற்கூரையில், மேல் தளத்தில், சோலார் பேனல் அமைப்பதன் பயன்கள் மற்றும் இத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தினை பற்றி அறிந்து கொள்ள, 9489080370, 9489080374 மொபைல் எண்ணிலும், ee7ped.py.gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

