/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பைகள் அகற்றும் சிறப்பு முகாம்
/
குப்பைகள் அகற்றும் சிறப்பு முகாம்
ADDED : மார் 20, 2025 04:51 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் ஒரு நாள் சிறப்பு முகாமை, உள்ளாட்சி துறை இயக்குனர் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் பகுதியில், தனியார் நிறுவன தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி வந்தனர். அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்காததால், குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சாலையில் தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, தவளக்குப்பம் பகுதியில், குப்பைகளை அகற்றும் ஒரு நாள் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலையில் தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றினர்.
தவளக்குப்பம், இடையார்பாளையம், அபிேஷகப்பாக்கம், நல்லவாடு சாலை, பூரணாங்குப்பம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டன.