ADDED : ஜன 08, 2026 05:13 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில், 'பாலின ஆய்வுகள் மற்றும் சமூக மாற்றம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லுாரி உதவி பேராசிரியர் கனன் பிரசாத் பங்கேற்று, உறவுகள், அதிகாரம், பண்பாடு ஆகிய சமூக கட்டமைப்பில் பாலின உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது.
இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் பாலின சித்தரிப்புகள், கல்வி, வேலைவாய்ப்பில் பாலின சமத்துவமின்மை, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் சட்டங்கள், பாலின சமத்துவம் மற்றும் நிலையான நீதியை சமூகத்தில் வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள், மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. ஏற்பாடுகளை ஆங்கில துறைத் தலைவர் இளமாறன் செய்திருந்தார்.

