/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி: 35 ஆண்டு பணி முடித்தோர் ஏக்கம்
/
சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி: 35 ஆண்டு பணி முடித்தோர் ஏக்கம்
சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி: 35 ஆண்டு பணி முடித்தோர் ஏக்கம்
சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி: 35 ஆண்டு பணி முடித்தோர் ஏக்கம்
ADDED : மார் 16, 2024 11:14 PM
புதுச்சேரி போலீசாருக்கு சமீபத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், 15 ஆண்டிற்கு பணி முடித்தவருக்கு, சிறப்பு நிலை உதவி சப்இன்ஸ்பெக்டர், 25 ஆண்டு முடித்தவருக்கு சிறப்பு நிலை சப்இன்ஸ்பெக்டர் பதவி வழங்கப்பட்டது.
இந்த பதவி உயர்வு மூலம் சம்பளத்தில் ஏதும் மாற்றம் செய்யப்படுவதில்லை. பதவிகள் மட்டுமே வழங்கப்படும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், இன்ஸ்பெக்டர் பதவி வரை நியமன மற்றும் பதவி உயர்வு அனுமதி அளிக்க டி.ஜி.பி.,க்கு அதிகாரம் உள்ளது. 25 ஆண்டு பணி முடித்தவருக்கு சிறப்பு நிலை சப்இன்ஸ்பெக்டர் பதவி வழங்கியதுபோல், 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அவ்வாறு பதவி உயர்வு அளிக்கும்போது சம்பள உயர்வு அளிக்க வேண்டியதில்லை.
இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு இணையான சம்பளம் ஏற்கனவே பெற்று வருகின்றனர்.
35 ஆண்டுகள் முடித்து பணி ஓய்வு பெறும்போது, இன்ஸ்பெக்டர் என்ற பதவியுடன் பணி ஓய்வு பெற்று செல்வர்.
இதனால் சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுமா என்ற கேள்வி சீனியர் சப்இன்ஸ்பெக்டர்களுக்கு எழுந்துள்ளது.

