தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

 புதுச்சேரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

 புதுச்சேரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 02, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் முதல் களை கட்டியது. நேற்று காலை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் சன்னிதியில், ராஜ அலங்காரத்தில் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் காந்தி வீதி வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர்; மிஷன் வீதி காளத்தீஸ்வரர், சுப்பையா சாலை கவுசிக பாலசுப்ரமணியர்; முதலியார்பேட்டை வன்னியபெருமாள், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், பொன்னு மாரியம்மன், ஏழைமாரியம்மன்; ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர்; வில்லியனுார் திருக்காமீஸ்வரர், தென்கலை வரதராஜபெருமாள், பெரிய காலாப்பட்டு பாலமுருகன், பாகூர் மூலநாதர், கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன், திருநள்ளார் சனீஸ்வரர், அம்பகரத்துார் பத்தகாளியம்மன், கோவில்பத்து கோதண்டராமர், நித்யா கல்யாணப் பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோவில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us