தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயற்கை கலைபொருட்கள் கொண்ட சிறப்பு ஓட்டுச்சாவடி அமைப்பு

 இயற்கை கலைபொருட்கள் கொண்ட சிறப்பு ஓட்டுச்சாவடி அமைப்பு

 இயற்கை கலைபொருட்கள் கொண்ட சிறப்பு ஓட்டுச்சாவடி அமைப்பு


ADDED : ஏப் 09, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பாரம்பரிய இயற்கை முறையில் கலை பொருட்களை கொண்ட சிறப்பு ஓட்டுச்சாவடியை கலெக்டர் இஷிதா ரதி பார்வையிட்டார்.

காரைக்கால் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி திருப்பட்டினம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இன்று (9ம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 181 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதில், மாவட்ட தேர்தல்துறை சார்பில் 5 பெண்கள் நிர்வாகிக்கும் ஓட்டுச்சாவடிகள், தலா 1 மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் நிர்வாகிக்கும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய பழங்கால இயற்கை முறையிலான கலை பொருட்களை கொண்டு சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாக்காளர்களை கவரும் வகையில் மீன்பிடி படகு, விவசாயத்தை பாதுகாக்கும் பல வகையான பாரம்பரியமான நெல் ரகங்கள், விளையாட்டு பொருட்கள், இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், இலவச இயற்கை உணவுகள், அழகு பொருட்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்த பொருட்கள், பனைமட்டை மூலம் வரவேற்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன.

இந்த சிறப்பு ஓட்டுச்சாவடி மையத்தை கலெக்டர் இஷிதா ரதி நேரில் சென்று பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us