/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
/
சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : அக் 12, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : சொர்ண பைரவர் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த, நாணமேடு சொர்ண பைரவர் கோவிலில், ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு பூஜை, ஹோமம் நடந்து வருகிறது.
நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி, லலிதா சகஸ்கர ஹோமம், சக்ர பூஜை, வடுக பூஜை, கன்னிகா பூஜை, 108 சுமங்கலி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.