/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு பூஜை
/
6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு பூஜை
6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு பூஜை
6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு பூஜை
ADDED : பிப் 27, 2026 06:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சியையொட்டி, சிறப்பு யாகம் நடத்தி மகர கும்ப தீபம் ஏற்றப்பட உள்ளது.
பூஜைகள் வரும் 5ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிேஷகம், கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது.
மறுநாள் 6ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு நீலாதேவி சமேத சனீஸ்வரர் ேஹாடசோமசார மகா தீபாராதனை, மாலை 6:30 மணிக்கு 80 அடி உயர மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
பூஜையில் பங்கேற்க விரும்புவோர், கோவிலில் ரூ.3,000 செலுத்தி, தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம் குருக்களை 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

