/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவு மானிய டிஜிட்டல் நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் உணவு மானிய டிஜிட்டல் நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

ADDED : பிப் 27, 2026 06:19 AM

புதுச்சேரி: 'டிஜிட்டல் புரட்சியை மோடி உருவாக்கியுள்ளார்' என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார்.
புதுச்சேரியில் பரிட்சாத்தமாக பிரதமரின் 'கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையை துவக்கி வைத்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது;
உலகுக்கு வழிகாட்டும் நிலையை இந்தியா எட்டியுள்ளது. டிஜிட்டலில் புரட்சியை மோடி உருவாக்கியுள்ளார். இதில் சி.டி.பி.சி., ஒரு மைல்கல் ஆகும். ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு தானியமும் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே மோடியின் எண்ணம். இதில் வெளிப்படைத்தன்மையும், கசிவு ஏதுமில்லாமல் இருப்பதற்கும் டிஜிட்டலை பயன்படுத்துகிறோம்.
உலகில் பெரிய அளவிலான உணவு விநியோகம் செய்கிறோம். குறிப்பாக நம் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் தருகிறோம். பல நாடுகளில் மக்கள் தொகையே இவ்வளவு இல்லை.
கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளி வந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் உணவு தானியங்கள் தருவதால் உணவுக்காக இதுவரை செலவிட்ட ரூ. 100ல் இருந்து ரூ. 50ஐ பால், காய்கறி, புரோட்டின் ஆகிய தேவைகளுக்கு செலவிடத் தொடங்கியுள்ளனர். பிட் இந்தியாவை நோக்கி நகர்கின்றனர். பொருளாதாரத்திலும் 4ம் இடத்துக்கு உலகளவில் இந்தியா சென்றுள்ளது. டிஜிட்டலிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 100 ரூபாய் நிதி ஒதுக்கினால் 15 ரூபாய்தான் உரியவருக்கு சென்றடைவதாக தெரிவித்தார். தற்போது டிஜிட்டலில் நேரடியாக முழு தொகையும் பயனாளிகளுக்கு பிரதமர் மோடியால் சென்றடைகிறது.
ரேஷன் கார்டு டிஜிட்டலாக்கப்பட்டுள்ளது. 99 சதவீதம் ஆதார் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது லஞ்சம், கசிவு குறைவதற்கு டிஜிட்டலாக்கமும் காரணம். தற்போது 100 கோடி மொபைலுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளன. தற்போது வாலட் மொபைலில் உருவாக்கியுள்ளோம். ஸ்மார்ட் போன் இல்லாவிட்டாலும், சாதாரண போன் வைத்திருந்தாலும் பயன்பெறும் வழியில் வடிவமைத்துள்ளோம்.
ஏழை மக்கள் அரிசி, கோதுமை வாங்க டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி மூலம் கணக்கு வைப்போம். இத்திட்டம் ஏற்கெனவே அகமதாபாத்தில் தொடங்கியுள்ளோம். தற்போது புதுச்சேரியிலும் அடுத்து சண்டிகரிலும் செயல்படுத்தப்படும். மொத்தம் 5 இடங்களில் செயல்படுத்தி திட்டத்தை ஆய்வு செய்து நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.