தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்


ADDED : பிப் 27, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.

ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலாபாய், வ.உ.சி., என்.கே.சி., ஆகிய மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி, மூன்று பள்ளிகளை சேர்ந்த 709 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப் டாப்களை வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் டிஜிட்டல் கல்வியில் முன்னேற அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என, தெரிவித்தார்.

இதில், தலைமை செயலர் சரத் சவுகான், சுசிலா பாய் பள்ளி துணை முதல்வர் ஸ்ரீராஜவேலு சுகந்தி, வ.உ.சி., பள்ளி துணை முதல்வர் சந்தகுமாரி, என்.கே.சி., பள்ளி துணை முதல்வர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us