ADDED : ஆக 28, 2026 11:42 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு – கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
