ADDED : ஆக 18, 2026 03:49 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 'விஷ்ணுபதி புண்ணிய காலம்' கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று காலை 6:00 மணிக்கு விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
