ADDED : ஏப் 01, 2025 04:15 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத் சார்பில் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது.
தவ்ஹூத் ஜமா அத் அமைப்பின் மாவட்ட தலைவர் அபிப் ரஹ்மான் ஏற்பாட்டில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் உள்ளிட்ட 6 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத் சார்பில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகைகள் நடந்தன.
மேலும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடந்தன.
