/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி புதுச்சேரியில் நவ.4ம் தேதி துவக்கம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி புதுச்சேரியில் நவ.4ம் தேதி துவக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி புதுச்சேரியில் நவ.4ம் தேதி துவக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி புதுச்சேரியில் நவ.4ம் தேதி துவக்கம்
ADDED : அக் 29, 2025 06:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தபணி வரும் நவ.4ம் தேதி துவங்குகிறது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரி மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி வரும் நவ.4ம் தேதி முதல் டிச., 4ம் தேதி வரை வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது. அதனையொட்டி, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்தது.
துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லைவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்.,-பா.ஜ., என்.ஆர்.காங்.,-தி.மு.க.,-அ.தி.மு.க.,-இந்திய கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலுடன் 2002ல் வெளியான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சரிபார்ப்பு மற்றும் பொருத்துதல், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாநிலத்தில் 967 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியை வரும் நவ. 4 முதல் டிச. 4 வரையிலும் மேற்கொள்வர். டிச. 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக டிச. 9 முதல் 2026 ஜன. 8 வரை கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு மனுக்கள் பெறப்படும். அதனைத் தொடர்ந்து வரும் 2026 பிப். 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டதும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை ஒப்புகை சீட்டுடன் வழங்குவர்.
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிகள் சம்மந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பார்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு என கலெக்டர் அலுவலகத்திலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பிரத்யோக கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950யை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டது.

