ADDED : மார் 26, 2026 09:06 PM
புதுச்சேரி: கோ - ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை நாளையுடன் முடிவடைகிறது.
புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த சிறப்பு விற்பனை நாளை 28ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து மண்டல மேலாளர் மாணிக்கம் கூறுகையில், 'தமிழகம் முழுதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தில் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், துண்டுகள், சேலைகள் போன்ற ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு தள்ளுபடியாக இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
இரண்டின் விலையில் மூன்று பொருட்கள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கோ ஆப்டெக்ஸ் வந்து துணி வகைகளை வாங்கி செல்கின்றனர். நாளை 28ம் தேதியுடன் இத்திட்டம் முடிய உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
