தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு

மருத்துவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு

மருத்துவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு


ADDED : செப் 13, 2025 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் நரம்பியல் துறை சார்பில், மருத்துவர்களுக்கான சிறப்பு மருத்துவ கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு சுகாதார இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கினார். நரம்பியியல் துறை தலைமை அதிகாரி சுரேஷ் வரவேற்றார்.

சென்னை, அப்போலோ மருத்துவமனை, மூத்த நரம்பியல் துறை அதிகாரி முத்துகுமார் பால்ராஜன் கலந்து கொண்டு, ரத்த ஓட்டத்தடையினால் ஏற்படக்கூடிய பக்கவாதத்திற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

கருத்தரங்கில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் குறை தீர்வு அதிகாரி ரவி, நரம்பியல் துறை அதிகாரி தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us