ADDED : ஜூலை 07, 2026 09:12 PM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் திருக்கனுாரில் நடந்த வரி வசூல் சிறப்பு முகாமை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில், நேற்று முன்தினம் (6ம் தேதி) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை வீடு, சொத்து, குடிநீர், தொழில் உரிம கட்டணம் மற்றும் வரி பாக்கி செலுத்துவதற்கான வரி வசூல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திருக்கனுார் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே நேற்று வரிவசூல் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
இதனை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்து, வரி செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்கினார்.
முகாமில், கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம், செட்டிப்பட்டு, மணலிப்பட்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது குடிநீர், வீட்டு, சொத்து உள்ளிட்ட வரி பாக்கிகளை செலுத்தி ரசீது பெற்று கொண்டனர். முகாமில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா, ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆணையர் எழில்ராஜன் கூறுகையில், ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தி முறைபடுத்திக் கொள்ள வேண்டும். முகாமில், வரி பாக்கியை செலுத்த தவறினால், வீட்டிற்கான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தார்.
