ADDED : ஜூலை 07, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: கோட்டுச்சேரி, அக்கம்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குப்புரத்தினம், 60; மீனவர்.
குடிபழக்கம் உள்ள இவர், கடந்த 3ம் தேதி போதையில், வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
