ADDED : ஜூலை 07, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் புது நகரில், நேற்று முன்தினம் இரவு சிலர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் சத்யராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். வம்பாகீரப்பாளையம், அங்காளம்மன் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன், 18; புது தெரு நடராஜன் மகன் தீபன்ராஜ், 20; முருகன் மகன் தேவேந்திரன் 23, ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 3 கத்திகளை பறிமுதல் செய்து போலீசார், அவர்களை கைது செய்தனர்.
