/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி
/
மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஜன 21, 2026 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய செவித்திறன் இழப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி கடந்த இரு தினங்களாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தேசிய செவித்திறன் இழப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். ராஜிவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஐயப்பன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவத் துறை தலைவர்கள், மாநில மூத்த ஆலோசகர்கள் மற்றும் ரெசிடென்ட் டாக்டர்கள் கலந்து கொண்டுனர்.
பயிற்சியில், பிறந்த குழந்தைகளின் செவித்திறன் இழப்பை கண்டறிதல் மற்றும் குழந்தை பேறு காலத்தில் செவித்திறன் இழப்பைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிவசங்கர், தனமாலினி, ஷர்மிளா ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

