/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
/
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஏப் 30, 2025 07:03 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் ஓட்டுனர் மற்றும் பழகுநர் பயிற்சி முகாம் நடக்கிறது.
அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையில் கடந்த 11.12.2021 முதல் பெண்களுக்கு சிறப்பு பழகுநர் மற்றும் ஓட்டுனர் உரிமம் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் இதுவரை பெண்களுக்கு 3,156 பழகுநர் உரிமம் மற்றும் 2131 ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாம் பெண்களுக்காக நடத்தப்படுகிறது. காரைக்காலில் இதுவரை நடந்த சிறப்பு முகாம் மூலம் 795 பழகுநர் மற்றும் 684 ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி, அனைத்து தரப்பு பெண்களும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.