ADDED : நவ 17, 2026 08:39 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதம் முதல் நாளில் வரும் விஷ்ணுபதி புண்ணிய காலங்களில் பக்தர்கள் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டின் கடைசி விஷ்ணுபதி புண்ணிய காலமாக இன்று (நவ.,17) நடந்ததால் அதிகாலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரை, வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஒவ்வொரு பக்தர்களும் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில், கொடிமரம் மற்றும் கருவறை வெளி பிரகாரத்தை 27 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
