/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மார்கழி மாதம் துவக்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
மார்கழி மாதம் துவக்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாதம் துவக்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாதம் துவக்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 17, 2024 05:13 AM
புதுச்சேரி: மார்கழி மாத பிறப்பையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
மார்கழி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, புதுச்சேரியில் உள்ள கோவில்கள் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக, மணக்குள விநாயகர், காந்தி வீதி வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர், வில்லியனுார் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
மார்கழி மாதத்தையொட்டி, பெருமாள் கோவில்களில் பஜனை நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல், மார்கழி மாதத்தை வரவேற்கும் வகையில், பெண்கள் வீட்டின் வாசலில் வண்ண கோலங்கள் வரைந்து மகிழ்ந்தனர்.

