/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் குறித்த கருத்தரங்கு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பு
/
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் குறித்த கருத்தரங்கு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பு
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் குறித்த கருத்தரங்கு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பு
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் குறித்த கருத்தரங்கு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 31, 2025 05:52 AM

புதுச்சேரி : ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மருத்துவ கருத்தரங்கில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவனையில், நடந்த மருத்துவ கருத்தரங்கில், உள்ளிருப்பு மருத்து அதிகாரி ஆத்மநாதன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறை தீர்ப்பு அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி டாக்டர் மனோகரன், மேல் மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவமனை டாக்டர் உமேஷ்ராஜ், சென்னை மருத்துவக்கல்லுாரி டாக்டர் இளையக்குமார், சிறு ரத்த குழாய்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
தொடர்ந்து, வெங்கடேஸ்வரா மருத்துவமனை டாக்டர் ராஜசேகர், திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர் ஆனந்த், வேலுார் மருத்துவக் கல்லுாரி டாக்டர் பிரபு பிரேம்குமார், ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த ஓட்ட குறைபாடுகளுக்கான சிகிச்சை முறைகள் பற்றி பேசினர்.
மேலும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் தேவராஜன், முரளி, ஜிப்மர் டாக்டர் பிரதாப், தமணியில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கருத்துரங்கு ஏற்பாடுகளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மணிகண்டபிரபு, கபில் பாலிகா, பிரதாப், சுப்ராயன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், பல்வேறு மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

