/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் கல்லுாரி தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி
/
வேளாண் கல்லுாரி தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி
வேளாண் கல்லுாரி தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி
வேளாண் கல்லுாரி தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி
ADDED : மார் 31, 2025 07:42 AM
காரைக்கால்; காரைக்கால் வேளாண்கல்லுாரி தோட்டக்கலைதுறை சார்பில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட பஜன்கோ வேளாண் கல்லுாரியில் தோட்டக்கலை பயிர்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி நாகை தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லுாரி இணைந்து தோட்டக்கலை பயிர்களில் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் குறித்து கீழ்வேளூர் பகுதியில் உள்ள கீழையூர் வட்டார விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் வேளாண் கல்லூரியின் முதல்வர் புஷ்பராஜ்,தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சாந்தி,பேராசிரியர் முனைவர் சுந்தரம் மற்றும் நாகை தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது சாதிக் முன்னிலை வகித்தனர்.
தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் மாரிசாமி வரவேற்றார்.
பஜன்கோ தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஷெர்லி காய்கறி பயிர்களில் மகசூலை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் அதியமான் தோட்டக்கலைப் பயிர்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
பூச்சியியல்துறை தலைவர் குமார் கத்தரி,மிளகாய் மற்றும் வெண்டை பயிர்களில் பூச்சி தாக்குதல் மற்றும் கட்டுபடுத்துதல் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இப்பயிற்சியின் இறுதியாக தோட்டக்கலைத்துறை முதுநிலை அறிவியல் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க கூடிய மிளகாய், தக்காளி, பாகல், புடலை, சுரைக்காய் மற்றும் பொரியல் தட்டை அவரையின் எண்ணற்ற ரகங்கள் மற்றும் வீரிய ஓட்டு ரகங்கள் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
பஜன்கோ கல்லூரியின் முதல்வர் புஷ்பராஜ் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வளரக்கூடிய கே.கே.எல்.ஆர்.,-3 மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய கே.கே.எல்.ஆர் -2 மற்றும் 4 நெல் ரகங்களும் காட்சிப்படுத்தியதையும் விவசாயிகள் பார்வையிட்டனர்.