
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், ஆன்மீக சொற்பொழிவு வெங்கட்டா நகர் புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.
சங்க தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் நளினி பார்த்தசாரதி, சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால், நிர்வாக செயலர் செல்வராஜூ முன்னிலை வகித்தனர்.
சொற்பொழிவில், ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை சச்சிதானந்த சுவாமிகள், மன அமைதி யோகம்' குறித்து பேசினார். நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

