sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்மிகம் மற்றும் ஜோதிடர் மாநாடு

/

 திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்மிகம் மற்றும் ஜோதிடர் மாநாடு

 திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்மிகம் மற்றும் ஜோதிடர் மாநாடு

 திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்மிகம் மற்றும் ஜோதிடர் மாநாடு


ADDED : மார் 02, 2026 04:02 AM

Google News

ADDED : மார் 02, 2026 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆன்மிகம் மற்றும் ஜோதிடர் மாநாட்டை தருமபுர ஆதீனம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் மார்ச்., 6ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நேற்று சனிப்பெயர்ச்சி ஆன்மிக விழா மற்றும் மாவட்ட நிர்வாகம், தருமை ஆதீனம் இணைந்து ஜோதிடர் மாநாடு தொடக்க விழா, திருநள்ளாறு பக்தர்கள் தங்கும் விடுதியில் நேற்று நடந்தது. திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில் நடந்தது.

முன்னதாக ஆன்மிக மாநாட்டு கொடியை தர்பாரண்யேஸ்வர கோவிலில் இருந்து யானை மூலம் ஊர்வலமாக மேளம் தாளம் முழங்க கொண்டு வரப்பட்டு கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. ஆன்மிக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக புதுடில்லி உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் முன்னிலையில் திருமுறைச் செப்பேடு கண்டருளிய தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி, மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்.

முன்னதாக திருநள்ளாறு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ ராஜா சுவாமிநாத சிவாசார்யார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், தலையங்க கலைவேந்தர் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், கலெக்டர் இஷிடா ராட்டி, மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்த் (பொ), குடும்ப நல நீதிபதி மோகன், சார்பு நீதிபதி பழனி, குற்றவியல் நடுவர் நீதிபதி அப்துல் கனி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us