/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் விளையாட்டு போட்டி
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 07, 2025 05:50 AM

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 34ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
போட்டி துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர் சம்பத் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார்.
அரசு பள்ளி உடற்கல்வி விரயுரையாளர் செந்தில்குமரன் கலந்து கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து பேசினார். மாணவர்கள் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு மியூசிக் சேர்,  ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், கோ கோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தப்பட்டன.
முன்னதாக, வட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிர்வாக இயக்குனர் மோகன் குமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் அய்யனார், விக்னேஸ்வரன், பிரித்தா செய்திருந்தனர்.

